செய்திகள்

ரோகித் சர்மாவை வீழ்த்த திட்டம் வகுத்துள்ளோம்: இலங்கை கேப்டன் திசாரா பெரேரா

மொகாலி ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மாவை, இன்றைய போட்டியில் விரைவில் வீழ்த்த திட்டம் வகுத்துள்ளோம் என இலங்கை கேப்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

விசாகப்பட்டினத்தில் இன்று 3-வது போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என இலங்கை நினைக்கிறது. இதற்கு ரோகித் சர்மா முட்டுக்கட்டையாக இருப்பார் என இலங்கை உறுதியாக நம்புகிறது. இந்நிலையில் ரோகித் சர்மாவை வீழ்த்த தி்ட்டம் வகுத்துள்ளோம் என்று இலங்கை கேப்டன் திசாரா பேரேரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திசாரா பேரேரா கூறுகையில் ‘‘விசாகப்பட்டினத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை, எங்கள் நாட்டில் உள்ளது போன்றே இருக்கிறது. அதனால் உள்ளூரில் சிறப்பாக ஆடுவது போன்று இங்கும் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்த போட்டிக்காக சிறந்த முறையில் தயாராகி இருக்கிறோம். இதை இன்னொரு சாதாரண ஆட்டமாகவே எடுத்துக் கொண்டு விளையாடுவோம். அதே சமயம் உலகின் தலைச்சிறந்த அணியாக விளங்கும் இந்தியாவுக்கு நிச்சயம் நெருக்கடி இருக்கும்.