சென்னை:
குடிநீர் பிரச்சினைக்கு அரசு தீர்வுகாண கோரி, தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் கடந்த 2 தினங்களாக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இன்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சைதை மேற்குப் பகுதி 139-வது வார்டில் தி.மு.க. மாவட்ட செயலாளரும், சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. வுமான மா.சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், தொ.மு.ச. பொது செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் சைதை அன்பாசன், ஸ்ரீதர் உள்பட பலர் பங்கேற்றனர்.
வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, ரங்கநாதன், நிர்வாகிகள் வாசு, ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வைத்திய நாதன் மேம்பாலம் அருகே வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் மயூரி, ஜெபதாஸ்பாண்டியன், சுந்தர்ராஜன்,மாஸ் வெங்கடேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பூர் வடக்கு, தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் எம்.கே.பி. நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பெரம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி. சேகர் தலைமை தாங்கினார். இதில் பகுதி செயலாளர்கள் ஜெயராமன், முருகன், நிர்வாகிகள் யுவராஜ், செந்த மிழரசு, கமலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைந்தகரையில் மோகன் எம்.எல்.ஏ. முன்னி லையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பகுதி செயலாளர்கள் பரமசிவம் தலைமை தாங்கினார். இது போல் மேற்கு மாம்பலம், டி.நகரில் பகுதி செயலாளர் ஏழுமலை, அண்ணாநகர் தெற்கில் ராமலிங்கம், ஷெனாய் நகரில் பரமசிவம், சேப்பாக்கத்தில் மதன்மோகன், அசோக் நகரில் ஜெ. கருணாநிதி, மாம்பலத்தில் வேலு, ஆயிரம் விளக்கு, திருவல்லிக் கேணியில் பகுதி செயலாளர் காமராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.