செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 21 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. #Hogenakkal #Cauvery

ஒகேனக்கல்:

கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுகிறது.

நேற்று ஒகேனல்லுக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

அதே போல கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1886 கனஅடியும், கபினி அணையில் இருந்து 1000 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க இன்று 57-வது நாளாக தடை நீடித்து வருகிறது. ஆனால் கோத்திக்கல் - மணல்திட்டு இடையே பரிசல் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்படவில்லை.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். #Hogenakkal #Cauvery