செய்திகள்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர்: இந்திய அணி இன்று தேர்வு

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை மலர்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் ஒரு சில மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், மும்பையை சேர்ந்த நிதிஷ் ரானா ஆகியோர் அணிக்கு புதுமுக வீரர்களாக தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. இருவரும் கிரிக்கெட் வாரியத்தின் ‘யோயோ’ டெஸ்டில் சமீபத்தில் தேர்வு பெற்றனர்.

3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் டிசம்பர் 20, 22 மற்றும் 24-ந்தேதிகளில் நடக்கிறது. தற்போது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து 3 ஒருநாள் தொடர் வருகிற 10-ந்தேதி தொடருகிறது. ஒருநாள் தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.