ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ்ரோடு பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மனோஜ் மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் தனியாக நடந்து செல்பவர்களிடம் தொடர்ந்து செல்போன் பறிப்பு மற்றும் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.