கைது 
செய்திகள்

வாலாஜா அருகே வீட்டிற்கு தீ வைத்த வாலிபர் கைது

வாலாஜா அருகே வீட்டிற்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலாஜா:

வாலாஜாவை அடுத்த அனந்தலை கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 22). இவர், நேற்று முன்தினம் அருகில் உள்ள தகரகுப்பம் கிராமத்திற்கு செல்லும் வழியில் கந்தன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டிற்கு தீ வைத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து கந்தன் வாலாஜா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபுவை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT