கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் நிவாரணம் நிதியாக ரூ. 3 ஆயிரம் வழங்கிய சிறுமி. 
செய்திகள்

முதல் -அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.3 ஆயிரம் வழங்கிய வாலாஜாவை சேர்ந்த சிறுமி

கொரோனா தொற்றை தடுப்பதற்காக முதல் -அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.3 ஆயிரம் வழங்கிய வாலாஜாவை சேர்ந்த சிறுமியை கலெக்டர் திவ்யதர்ஷினி பாராட்டியுள்ளார்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சேஷாத்ரி. இவரது மகள் மோனிஷா (வயது6). இவரது தந்தை தினமும் கொடுக்கும் பணத்தை சேமித்து வந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை வழங்க முடிவு செய்தார். நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினியை நேரில் சந்தித்து சேமித்து வைத்த பணம் ரூ.3 ஆயிரத்திற்கான காசோலையாக கலெக்டர் திவ்யதர்ஷினியிடம் வழங்கினர். இதனை கலெக்டர் திவ்யதர்ஷினி பெற்றுக்கொண்டு பாராட்டு தெரிவித்தார்.