செய்திகள்

வாலாஜா அருகே வாக்குசாவடி மையத்தில் மூதாட்டி மரணம்

வாலாஜா அருகே வாக்குசாவடி மையத்தில் மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மாலை மலர்

வாலாஜா:

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம் ஆகிய 3 சட்டமன்ற இடைதேர்தல் வாக்குபதிவு இன்று நடந்து வருகிறது.

இந்நிலையில் வாலாஜா அருகே உள்ள அனந்தலை குளத்துதெருவை சேர்ந்தவர் துளசி (வயது 80). இவர் இன்று அதே பகுதியில் உள்ள அரசு நிதியுதவி நடு நிலைபள்ளி மையத்தில் உள்ள வாக்குசாவடியில் ஓட்டு போடுவதற்காக சென்றார்.

வாக்குசாவடி மையத்தின் உள்ளே சென்ற போது திடீரென மயங்கி விழந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.