கோப்பு படம் 
செய்திகள்

மத்தியபிரதேச இடைத்தேர்தல் - 1 மணிநிலவரப்படி 42.71 சதவீத வாக்குப்பதிவு

மத்தியபிரதேச இடைத்தேர்தலில் 1 மணிநிலவரப்படி 42.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாலை மலர்

போபால்:

230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடினார். அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியில் இருந்து விலகினர்.  

இதையடுத்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். அவர்களை தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர். 

இதனால், மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்ந்து சிவராஜ்சிங் சவுகான் 

தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை கைப்பற்றியது. இதன் விளைவாக ஏற்கனவே காலியாக இருந்த 3 இடங்களை சேர்த்து மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதியம் 1 மணி நிலரப்படி மத்தியபிரதேச இடைத்தேர்தலில் 42.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.