கல்யாண் சிங்குடன் மோடி 
செய்திகள்

ஓரங்கட்டப்பட்ட மக்களின் குரல்... கல்யாண் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கல்யாண் சிங் மறைவு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

புதுடெல்லி:

பாஜக மூத்த தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியுமான கல்யாண் சிங் (வயது 89) இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கல்யாண் சிங் மறைவு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு வேதனை அளிப்பதாக கூறி உள்ளார். 

அரசியல் மேதை, மூத்த நிர்வாகி, அடிமட்ட தலைவர் மற்றும் சிறந்த மனிதரான கல்யாண் சிங், உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிக்கு மறக்க முடியாத பங்களிப்பை விட்டுச் சென்றிருப்பதாகவும், அவரது மகன் ஸ்ரீ ராஜ்வீர் சிங்கை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாகவும் மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் கலாச்சார மீளுருவாக்கத்திற்காக செய்த பங்களிப்புகளுக்கு வரவிருக்கும் தலைமுறைகள் கல்யாண் சிங்கிற்கு என்றென்றும் நன்றியுடன் இருக்கும். சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்காக அவர் குரல் கொடுத்தார். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் மேம்பாட்டிற்காக அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT