புதுடெல்லி:
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரம்ஜான் சிறப்பு சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் இலவச டேட்டா உள்ளிட்டவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மேற்கு உத்திர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
ரம்ஜான் சிறப்பு சலுகையின் கீழ் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 மற்றும் ரூ.19 விலையில் அன்லிமிட்டெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதே போல் 2ஜி வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா உள்ளிட்டவை ரூ.253க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டா ரூ.345க்கு வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வோடபோன் நிறுவனம் வோடபோன் ரெட் ஷீல்டு எனும் திட்டத்தை தனது ரெட் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் புதிதாய் வாங்கிய ஸ்மார்ட்பன்களுக்கு ரூ.50,000 மதிப்புள்ள இன்சூரன்ஸ் பெற முடியும்.
வோடபோன் ரெட் ஷீல்டு திட்டத்திற்கான ஆண்டு சந்தா ரூ.720 என நிர்ணயம் செய்யப்பட்டு, இந்த தொகை மாதம் ரூ.60 என்ற வீதம் 12 மாதங்களில் வசூலிக்கப்படும். வோடபோன் ரெட் ஷீல்டு செயலி கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இந்த செயலி வாடிக்கையாளர்களுக்கு மால்வேர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகிறது.