செய்திகள்

84 நாட்கள் 84 ஜிபி டேட்டா: வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து வரும் நிலையில், வோடபோன் நிறுவனமும் 84 நாள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த தண் தணா தண் சலுகைக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் வோடபோன் நிறுவனம் புதிதாய் இணைந்துள்ளது. வோடபோன் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் படி வாடிக்கையளர்களுக்கு 84 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் முதல் முறை ரூ.445க்கு ரீசார்ஜ் செய்து புதிய சலுகையை பெற முடியும். இந்த சலுகை மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்டாரங்களில் உள்ள 4ஜி ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 

4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு 2ஜிபி டே்டா மற்றும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் 35 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போன்ற சலுகைகள் ஏர்டெல் நிறுவனமும் சமீபத்தில் அறிவித்தது. ஏர்டெல் அறிவித்துள்ள சலுகைக்கு வாடிக்கையாளர்கள் ரூ.399 செலுத்த வேண்டும். இதில் அவர்களுக்கு 84 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை வழஙஅக்பபடுகிறது. இதை பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் ஏர்டெல் எண்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.0.10 மற்ற நெட்வொர்க்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.0.30 செலுத்த வேண்டும். 

இதே போன்ற சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ தண் தணா தண் என்ற பெயரில் அறிவித்தது. ஜியோ திட்டத்தின் விலை ரூ.399 என நிர்ணயிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு 84 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அதிவேக 4ஜி டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், இலவச ரோமிங் மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த முடியும். 

ஜியோ 4ஜி சேவைகளை போன்றே பிராட்பேண்ட் சேவைகளை ஜியோ வழங்க இருக்கிறது. அக்டோபர் முதல் வெளியாக இருக்கும் பிராட்பேண்ட் சேவை கட்டணங்களும் மிகவும் மலிவு விலையில் நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் 1Gbps வேகத்தில் 100 ஜிபி டேட்டாவின் விலை ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டு முதற்கட்டமாக 100 நகரங்களில் இந்த சேவை துவங்கப்பட இருக்கிறது.