செய்திகள்

திண்டுக்கல் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பலி

திண்டுக்கல் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு பிளஸ்-2 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் அருகே உள்ள பொட்டிக் குளத்தைச் சேர்ந்தவர் அன்பு. கூலித் தொழிலாளி. இவரது மகள் மகாலெட்சுமி (வயது 17). பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கொடை ரோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போதே மகாலெட்சுமி ரத்தவாந்தி எடுத்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து டாக்டர்கள் தெரிவிக்கையில், வைரஸ் காய்ச்சல் காரணமாக மாணவி இறந்துள்ளதாக கூறினர். ஆனால் தொடர்ந்து இப்பகுதியில் பலருக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.