போரூர்:
விருகம்பாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் கைக்காங் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக கே.கே.நகர் அமுதம் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டு செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ராதிகாவின் செல்போனை பறித்து தப்பி சென்றனர்.