செய்திகள்

அமெரிக்கா: விர்ஜினியா பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு - வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது

அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிசூடு சம்பவம் நடைபெற்றதை அடுத்து பல்கலைக்கழக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மாலை மலர்

நியூயார்க்:

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, போலீசுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த ஒருவரையும் போலீசார் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு செல்லும் வாகனங்களும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. தனிப்பட்ட தாக்குதலாக இது இருக்கும் என நகர போலீசார் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 60 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.