செய்திகள்

மக்களவை இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்பு

17வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் இன்று பதவியேற்றார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 31-ந் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ந் தேதி கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று 17-வது பாராளுமன்ற மக்களவை முதல் முறையாக கூடுகிறது. இதையொட்டி இடைக்கால சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்பி வீரேந்திர குமார் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

SCROLL FOR NEXT