செய்திகள்

இமாசலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங் ராஜினாமா

இமாசலபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து முதல்-மந்திரி வீரபத்ரசிங் ராஜினாமா செய்தார்.

மாலை மலர்

சிம்லா:

இமாசலபிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வசம் இருந்த ஆட்சியை பா.ஜனதா தட்டிப்பறித்துள்ளது. ஆட்சிக்கு எதிரான அலை வீசியதால் காங்கிரஸ் கட்சியால் 21 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது.

இந்த தோல்வியை தொடர்ந்து முதல்-மந்திரி வீரபத்ரசிங் நேற்று கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத்திடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர், புதிய அரசு பதவி ஏற்கும் வரை பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

83 வயதாகும் வீரபத்ரசிங் ராம்பூர்-புஷார் மன்னர் குடும்ப வாரிசு ஆவார். இந்த தேர்தலில் அவர் 8-வது முறையாக வெற்றிபெற்றார். 55 ஆண்டுகளாக அரசியலில் உள்ள அவர் 4 முறை எம்.பி.யாகவும், 1983-ம் ஆண்டு முதல் 6 முறை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார்.