செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி முதலிடம்; தவான் 10-வது இடத்திற்கு முன்னேற்றம்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு அரை சதங்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டி வில்லியர்ஸ், வார்னரை பின்னுக்குத்தள்ளி கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

மாலை மலர்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதற்கு முன் டி வில்லியர்ஸ் முதல் இடத்தில் இருந்தார். வார்னர் 2-வது இடத்திலும், விராட் கோலி 3-வது இடத்திலும் இருந்தனர்.

சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டு அரை சதங்கள் அடித்ததன் மூலம் விராட் கோலி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 862 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய தொடக்க பேட்ஸ்மேன் வார்னர் 861 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டி வில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு அரை சதங்களும், ஒரு சதமும் விளாசிய தவான் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.