செய்திகள்

டிராவிட் சாதனையை முறியடித்த விராட் கோலி

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் டிராவிட் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார்.

மாலை மலர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் 82 ரன்கள் எடுத்து முக்கிய பங்கு வகித்தார்.

29-வது ரன்னை எடுத்தப்போது அவர் ராகுல் டிராவிட்டை முந்தினார். ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 9-வது இடத்தை பிடித்தார். விராட்கோலி 229 போட்டியில் 21 இன்னிங்ஸ் விளையாடி 10,943 ரன் எடுத்து உள்ளார். சராசரி 59.47 ஆகும்.