செய்திகள்

போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்: கேரள முதல்வருடன் விராட் கோலி கலந்து கொண்டார்

கேரளாவில் நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் அம்மாநில முதல்வருடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கலந்து கொண்டார்.

மாலை மலர்

கேரள போலீஸ் துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் பிரணாய் விஜயன், மாநில டிஜிபி லோக்நாத் பெஹாரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் போதை பொருள் பயன்படுத்துவதற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.