இதையடுத்து வரும் ஆகஸ்ட் 3ம்தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடக்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இளம் வீரர்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை மிகவும் வியப்பாக உள்ளது. நாங்கள் சிறுவயதில் இருக்கும்போது இதுபோன்ற வீரர்கள் பாதிக்கூட இல்லை.
தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். அதேசமயம், நாட்டிற்காக விளையாடுகிறோம் என்பதை புரிந்துக் கொண்டு விளையாட வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளது.