செய்திகள்

ரிக்கி பாண்டிங்கை சமன் செய்த விராட்கோலி

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் விராட்கோலி சதம் அடித்ததன் மூலம் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை விராட்கோலி சமன் செய்தார்.

மாலை மலர்

இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி சதம் அடித்தார். 194-வது ஒருநாள் போட்டியில் ஆடிய விராட்கோலி அடித்த 30-வது சதம் இதுவாகும்.

இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கின் (375 ஒருநாள் போட்டியில் 30 சதம்) சாதனையை விராட்கோலி சமன் செய்தார்.

ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் (463 போட்டியில்) அடித்து முதலிடத்தில் இருக்கிறார். இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விராட்கோலி அடித்த 8-வது சதம் இதுவாகும். இதன் மூலம் இலங்கைக்கு எதிராக அதிக சதம் அடித்து இருந்த தெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.