வெற்றிக் கோப்பையுடன் விராட் கோலி 
செய்திகள்

டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி- டோனியின் சாதனையை முறியடித்த கோலி

அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றதுடன், டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் 2-0 என கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியின் வெற்றியின் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். கேப்டன் பொறுப்பில் அதிக வெற்றிகளைப் பெற்ற டோனியின் சாதனையையும் கோலி முறியடித்துள்ளார்.

SCROLL FOR NEXT