செய்திகள்

சர்வதேச போட்டியில் 64 சதம் அடித்து கோலி 3-வது இடம்: சங்ககராவை முந்தினார்

அடிலெய்டில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி 64 சர்வதேச சதங்களுடன் சங்ககராவை முந்தி 3-வது இடத்தை பிடித்துள்ளார். #ViratKohli

மாலை மலர்

இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த தெண்டுல்கருக்கு (49 செஞ்சூரி) அடுத்தபடியாக விராட் கோலி தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7-வது சதம் அடித்துள்ள விராட் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் 6-வது செஞ்சூரியை பதிவு செய்தார்.

சர்வதேச போட்டியில் (டெஸ்ட்-ஒருநாள் போட்டி) விராட் கோலி 64-வது செஞ்சூரியை அடித்துள்ளார். இதன் மூலம் அவர் சங்ககராவை முந்தி 3-வது இடத்தை பிடித்தார். சங்ககரா 666 இன்னிங்சில் 63 சதங்கள் அடித்து இருந்தார். கோலி 401 இன்னிங்சில் 64 சதங்கள் எடுத்து தெண்டுல்கர், பாண்டிங்குக்கு அடுத்த நிலையில் உள்ளார்.