தோகைமலை:
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்திற்குட்ட பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் தோகைமலை போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதை அனைவருக்கும் தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். இதில் 23 ஊராட்சி மன்ற தலைவர்கள், போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.