செய்திகள்

சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க ஜெயிலில் ரூ.2 கோடி லஞ்சம்: விசாரணை அதிகாரியாக வினய்குமார் நியமனம்

சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குவதற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரியாக வினய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் நான்காண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்கு 2 கோடி ரூபாய் வரை உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் மீதும் அவர் லஞ்சப் புகார் தெரிவித்துள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தும்படி முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். டிஐஜி ரூபா கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.