கைது 
செய்திகள்

விழுப்புரம் அருகே தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

விழுப்புரம் அருகே தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

விழுப்புரம் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 40). இவர் மீது கண்டமங்கலம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் பன்னீர்செல்வத்தை கண்டமங்கலம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் பன்னீர்செல்வத்தை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார்.

இதையடுத்து பன்னீர்செல்வத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.