செய்திகள்

பள்ளி சென்று திரும்பிய சிறுவன் வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி சென்று திரும்பிய சிறுவன், வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே, இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன், இன்று பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வேன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். தாயின் கண் எதிரே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஏராளமான மக்கள் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் ஜூன் 3-ம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகளை திறக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், முகுந்தன் படித்த பள்ளிக்கூடம் முன்கூட்டியே திறந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.