செய்திகள்

வில்லிவாக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து - 2 பேர் பலி

சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டிய நபர், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதிய விபத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் பலியாகினர். #CarAccident

மாலை மலர்

சென்னை:

சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டிய நபர், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதிய விபத்தில் மூதாட்டி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

போதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனால் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #CarAccident