வில்லியனூர்:
வில்லியனூர் அருகே உள்ள ஒதியம்பட்டு திருக்காஞ்சி சாலையில் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்து குவிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் கடத்தியதாக
இருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் அவர்கள் உத்திரவாகினிபேட் வசந்த் (வயது32), தமிழக பகுதியான குமாரமங்கலம் தமிழ் (25) என்பதும் தெரியவந்தது. அதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து மணலை பறிமுதல் செய்தனர்.