கோப்பு படம் 
செய்திகள்

வில்லியனூர் அருகே பணம் கொடுக்க மறுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்

வில்லியனூர் அருகே பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே பொறையூர் வள்ளுவன் பேட் பகுதியை சேர்ந்த கிருபானந்தன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி. (வயது 38).

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜீவா என்ற ஜீவரத்தினத்துக்கும் பணம் கொடுக்கல் - வாங்கல் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஜீவா, சுகந்தியிடம் பணம் கடன் கேட்டார். ஆனால், சுகந்தி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவா தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதோடு அவரையும், அவரது மகனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து சுகந்தி வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவாவை தேடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT