செய்திகள்

வில்லாபுரத்தில் குப்பை லாரி மோதி தனியார் பள்ளி மேலாளர் பலி

வில்லாபுரத்தில் இன்று காலை நடந்த விபத்தில் மாநகராட்சி குப்பை லாரி மோதி பள்ளி மேலாளர் இறந்தார்.

அவனியாபுரம்:

மதுரை கூடல்நகர், சொக்கலிங்கம் நகரைச் சேர்ந்தவர் ஜெபசிங் ரத்தினசாமி (வயது 54). இவர் பெருங்குடியில் உள்ள அமுதம் மெட்ரிக் குலேசன் பள்ளியில் மேலாளராக பணி புரிந்து வந்தார்.

இன்று காலை 7.30 மணியளவில் ஜெபசிங் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.

வில்லாபுரம் ஆர்ச் அருகே உள்ள தனியார் பள்ளி முன்பு சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மாநகராட்சி குப்பை லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

விபத்து குறித்து கீரைத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி, தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயமாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT