அதிமுக 
செய்திகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல்- அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை:

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர்.

திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு.

நெல்லை மாநகர், நெல்லை புறநகர், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி, திண்டுக்கல், திருச்சி மாநகர், திருச்சி புறநகர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு.

வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றுவார்கள்.

மேற்கண்ட தகவலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.