விபத்து பலி 
செய்திகள்

விக்கிரமங்கலம் அருகே கார் மோதி தொழிலாளி பலி

விக்கிரமங்கலம் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சோழவந்தான்:

விக்கிரமங்கலம் அருகே பூச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாயத்தேவர்(வயது 53). இவர் மதுரை செல்லூரில் உள்ள தனது மகன் வீட்டில் இருந்து சோழவந்தான் அருகே திருவாலவாய் நல்லூர் கிராமத்திலுள்ள லாரி செட்டில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக நான்கு வழிச்சாலையை கடந்த போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மாயத்தேவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.