செய்திகள்

தெலுங்கானா மாநில காங். பிரசார தலைவராக விஜயசாந்தி நியமனம்

தெலுங்கானா மாநில காங்கிரஸ் பிரசார தலைவராக விஜயசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். #Congress #Vijayashanti

ஐதராபாத்:

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கூட்டணி பெறும் சரிவை சந்தித்தது. பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் அதிக இடங்களை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் பிரசார கமிட்டி தலைவராக நடிகை விஜயகாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் பிரசார கமிட்டி தலைவராக இருந்த மாலு பாக்தி விக்ர மர்கா சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் பிரசார கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகினார். தெலுங்கானா சட்டசபை தேர்தலின் போது விஜயசாந்தி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு பிரசாரம் செய்தார். அவர் அக்கட்சியின் நட்சத்திர பிரசார ஆயுதமாக வலம் வந்தார். அப்போது முதல்வர் சந்திரசேகரராவ் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார். இதையடுத்து அவர் பாராளுமன்ற தேர்தல் பிரசார காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். #Congress #Vijayashanti

SCROLL FOR NEXT