குடும்பத்துடன் செல்வி எடுத்துக் கொண்ட விஜயகாந்த் 
செய்திகள்

பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு குடும்பத்துடன் செல்பி எடுத்துக்கொண்டுள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள். இன்றுடன் 68 வயது முடிவடைந்து 69-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

அவருக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தெலுங்கானா ஆளுவர் தமிழிசை உள்ளிட்டோர் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர் குடும்பத்துடன் செல்பி எடுத்து பிறந்த நாள் செல்வி என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.