செய்திகள்

தமிழக மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் கிடைத்திட வேண்டும்: விஜயகாந்த் புத்தாண்டு வாழ்த்து

தமிழக மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் உறுதியாக கிடைத்திட வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். #Vijayakant #DMDK #NewYear2018

மாலை மலர்

சென்னை:

தமிழக மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் உறுதியாக கிடைத்திட வேண்டுமென தேமுதிக தலைவர் விஜயகாந்த்  புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

நாளை ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் தமிழக மக்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது-

தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய மூன்றும் மக்கள் அனைவருக்கும், உறுதியாக கிடைத்திட வேண்டுமென எனது இதயப்பூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தேமுதிக சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

#Vijayakant #DMDK #NewYear2018