செய்திகள்

வெளியுறவு அமைச்சகத்தின் புதிய செயலாளராக விஜய் கேஷவ் கோகலே நியமனம்

தற்போதைய வெளியுறவு அமைச்சக செயலாளர் ஜெய் ஷங்கரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய செயலாளராக விஜய் கேஷவ் கோகலே நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளராக உள்ள ஜெய் ஷங்கரின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மூத்த ஐ.எப்.எஸ் அதிகாரியும், சீனாவுக்கான இந்திய தூதராக உள்ள விஜய் கேஷவ் கோகலே புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1981-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.எப்.எஸ் அதிகாரியான கேஷவ் கோகலே ஜெர்மனி மற்றும் மலேசியா நாட்டிற்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். இந்திய - தைபேய் அமைப்பின் இயக்குநர் ஜெனரலாகவும் அவர் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்.

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெய் ஷங்கர், விரைவில் தனது பொறுப்புகளை கேஷவிடம் ஒப்படைக்க உள்ளார்.