வேலூர்:
மெர்சல் பட விவகாரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
திருமாவளவனை, தமிழிசை கடும் விமர்சனம் செய்துள்ளார். இதனை கண்டித்து வேலூர் அடுத்த கணியம்பாடி பஸ் நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தையினர் இன்று போராட்டம் செய்தனர்.
ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் சரவணன், பொருளாளர் குமார், துணை செயலாளர் யுவராஜ், மாவட்ட துணை அமைப்பாளர் கண்ணதாசன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, அங்கிருந்து ஊர்வலமாக வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வந்து தமிழிசை சவுந்தரராஜனை கைது செய்யக்கோரி புகார் மனு அளித்தனர்.