செய்திகள்

கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மீது நடத்தப்படும் சாதி வெறி தாக்குதல்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மீது நடத்தப்படும் சாதி வெறி தாக்குதல் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடும் காவல்துறைய கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொருளாளர் முனிராஜ், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளர்கள் ஜிம்.மோகன், வெங்கடேஷ், சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் பர்கூர் மன்னர்மன்னன், கிருஷ்ணகிரி தியாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் மாயவன் வரவேற்று பேசினார்.

இதில் மண்டல அமைப்பு செயலாளர் நந்தன் கலந்து கொண்டு கண்டனவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மாநில பொறுப்பாளர்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணத்தை உடனே அமல்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த 25 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையினை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு கல்வி நிலையங்களில் கடைபிடிக்கும் சாதி, மதவாத போக்கை கைவிட வேண்டும். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.