செய்திகள்

ஒடிசாவில் பானி புயலின் கோரதாண்டவம் - வீடியோ உள்ளே

ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் - சந்தபாலி இடையே இன்று காலை கரையை கடந்த பானிபுயலின் கோரதாண்டவ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. #CycloneFaniVideo

மாலை மலர்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த ஏப்ரல் 27ம் தேதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதன் பின்னர் புயலாக மாறி கடலோரப்பகுதிகளை தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதனையடுத்து கடந்த மே 1ம் தேதி அதி தீவிர புயலாக மாறியதாகவும், இதற்கு பானி புயல் எனவும் பெயரிடப்பட்டது.  இந்த புயல் ஒடிசா நோக்கி நகர்ந்து வருகிறது எனவும், ஓரிரு நாட்களில் ஒடிசாவில் கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.  இதனால் கடலோர மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதையடுத்து  ஒடிசாவின் புரி பகுதியில் இன்று காலை 8.30க்கு கரையை கடக்க தொடங்கிய பானி புயல், 11 மணி அளவில் கரையை கடந்து, மேற்கு வங்காளம் நோக்கி நகர்ந்தது.

இந்நிலையில் ஒடிசாவின் புரி பகுதியில் இந்த பானி புயலின் கோரதாண்டவம் இடம் பெற்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த புயலில் சாலையெங்கும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன.

மின் கோபுரங்கள், செல்போன் கோபுரங்கள் சாய்ந்துள்ளன.இந்த சேதங்கள் தொடர்பாக ஒடிசாவின் தலைமை செயலாளர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #CycloneFaniVideo