செய்திகள்

ரஞ்சி கிரிக்கெட் அரையிறுதி: விதர்பா அணி திரில் வெற்றி

ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் கர்நாடகாவுக்கு எதிராக 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று விதர்பா அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மாலை மலர்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம்- விதர்பா அணிகள் மோதும் அரையிறுதி போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்சில் விதர்பா 185 ரன்னும், கர்நாடகா 301 ரன்னும் எடுத்தன. 116 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய விதர்பா அணி 313 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதையடுத்து 198 ரன் இலக்கை நோக்கி விளையாடிய கர்நாடகா விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் கர்நாடகா 7 விக்கெட் இழப்புக்கு 111 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் வினய்குமார் 19 ரன்னுடனும், ஸ்ரேயாஸ் கோபால் 1 ரன்னுடனும் இருந்தனர்.

இன்று 5-ம் நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு 87 ரன் தேவை என்ற நிலையில் வினய்குமார்- கோபால் தொடர்ந்து விளையாடினர். வினய்குமார் 36 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 141 ரன்னாக இருந்தது.

அடுத்து வந்த அபிமன்யூ மிதுன் அதிரடியாக விளையாடினார். அவர் 26 பந்தில் 33 ரன்னிலும், அடுத்த வந்த அரவிந்த் 2 ரன்னிலும் அவுட் ஆனார்கள். கர்நாடகா அணி 59.1 ஓவரில் 192 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் விதர்பா 5 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற விதர்பா   முறையாக ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கோபால் 24  ரன்களுடன் களத்தில் இருந்தார்.