கார்டிப் :
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் கார்டிப்பில் நடந்த லீக்கில் இங்கிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 311 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 44.3 ஓவர் களில் 223 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 2-வது வெற்றியை ருசித்த இங்கிலாந்து முதல் அணியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், ‘பேட்டிங் பரவாயில்லை. ஆனால் முதல் பாதி ஆட்டம் எங்களுக்கு முழு திருப்தி அளிக்கவில்லை. ஏனெனில் எதிர்பார்த்ததை விட 20 முதல் 30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். அதே சமயம் பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை கச்சிதமாக செய்து காட்டினர். ஒருங்கிணைந்து அற்புதமாக செயல்பட்டனர். இந்த ஆட்டத்தில் பந்து வீச்சு தான் பிரதானமாக இருந்தது’ என்றார்.