செய்திகள்

திரிபுரா, நாகலாந்து தேர்தல் வெற்றி பிரதமர் மோடியின் தலைமைக்கான ஒப்புதல் - அமித் ஷா

திரிபுரா, நாகலாந்து சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள வெற்றியை பிரதமர் மோடியின் தலைமைக்கு மக்கள் அளித்துள்ள ஒப்புதலாக கருத வேண்டும் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். #modi #Tripura #Nagaland #amitshah

மாலை மலர்

புதுடெல்லி:

60 இடங்களை திரிபுரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 43 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. நாகலாந்து சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி 27 இடங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, திரிபுரா, நாகலாந்து சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள வெற்றியை பிரதமர் மோடியின் தலைமைக்கு மக்கள் அளித்துள்ள ஒப்புதலாக கருத வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கிடைத்துள்ள மக்களின் தீர்ப்பு, எதிர்வரும் கர்நாடக சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களிலும் எதிரொலிக்கும். ஒவ்வொரு தேர்தல் முடிவும் பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவாகவே வந்துள்ளன. பா.ஜ.க.வும் தேசிய ஜனநாயக கூட்டணியும் 21 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ளன. 

ஒடிசா, கர்நாடகா, மேற்கு வங்காளத்திலும் நாங்கள் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.க.வின் பொற்காலம் தொடங்கும். மேகாலயா மாநிலத்தில் போதிய ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை காங்கிரஸ் இழந்துவிட்ட நிலையில் அங்கு ஆட்சி அமைப்பதற்காக குதிரை பேரத்தில் பா.ஜ.க. ஈடுபடாது என்றும் அவர் தெரிவித்தார். #tamilnews #modi #Tripura #Nagaland #amitshah