செய்திகள்

டெல்லி: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி:

இந்தியாவின் குடியரசு துணை தலைவராக பதவி வகித்து வருபவர் வெங்கையா நாயுடு. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்து வந்தவர். எதிர்க்கட்சிகளால் பெரிதும் மதிக்கப்பட்டு போற்றப்படுபவர். இவர் குடியரசு துணை தலைவராக பதவியேற்றது முதல் பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்து சென்றார்.

இந்நிலையில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சைக்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கமான பரிசோதனையே செய்யப்பட்டுள்ளது. நாளை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT