வேட்டவலம்:
வேட்டவலத்தை அடுத்த வேளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. அவரது மனைவி அலமேலு (வயது 70). இந்த நிலையில் நேற்று அலமேலு விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.