ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சை மீண்டும் பூதாகரமாக கிளம்பியுள்ளது. சிகிச்சையின்போது வீடியோ எடுத்திருப்பதாகவும் தேவைப்பட்டால் வீடியோ ஆதாரத்தை வெளியிடுவதாகவும் டிடிவி தினகரன் கூறி வந்தார்.
இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அரசு சார்பில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் நிருபர்களிடம் கூறும்போது, ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றார். மேலும், விசாரணை ஆணையம் கோரினால் சிகிச்சை தொடர்பான வீடியோ ஆதாரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.