செய்திகள்

சபாநாயகர் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடருவோம்: வெற்றிவேல் பேட்டி

சபாநாயகர் தனபால் எடுத்துள்ள தவறான முடிவு குறித்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம். கோர்ட்டில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று வெற்றிவேல் கூறினார்.

சென்னை:

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியதாவது:-

நாங்கள் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. தகுதி நீக்கத்துக்கு சபாநாயகர் கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல. கொறடா உத்தரவு பேரவைக்குள் மட்டும் தான் செல்லும்.

சபாநாயகர் எடுத்துள்ள தவறான முடிவு குறித்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம். கோர்ட்டில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.