சென்னை:
மேலூர் கூட்டத்தில் பங்கேற்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வும், வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான வெற்றிவேல் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முதல் பொதுக்கூட்டம் மிக எழுச்சியுடன் நடந்து முடிந்தது. மறைந்த முதல்வர் அம்மா நடத்திய பொதுக்கூட்டம் போல் இது அமைந்து இருந்தது.
உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் ஒவ்வொரு கேள்விக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வமும் பதில் சொல்ல வேண்டும்.
முதல் கூட்டத்தில் 22 எம்.எல்.ஏ.க்கள், 7 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இன்னும் பலர் எதிர் முகாமில் இருக்கிறார்கள். தற்போது 40 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் பலர் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் சரியான நேரத்தில் வெளிப்படையாக வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.