ராம்ஜெத் மலானி 
செய்திகள்

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி காலமானார்

மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம்ஜெத் மலானி டெல்லியில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார்.

மாலை மலர்

புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரியும் மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி டெல்லியில் இன்று காலமானார். அவரது வயது 95. உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள தனது வீட்டில் அவர் இன்று காலை காலமானார்.

பாகிஸ்தானின் சிந்து பகுதியில் பிறந்த இவர் சொந்த ஊரில் வழக்கறிஞராக வேலைசெய்து வந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு மும்பைக்கு வந்து வழக்கறிஞராக பணியாற்றினார். வாஜ்பாய் மந்திரி சபையில் சட்டம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.